fbpx
Homeபிற செய்திகள்பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஆசிரி யர்கள் மேற்கொண்டு வரும் காத்தி ருப்பு போராட்டம் நேற்று 21 வது நாளை எட்டியுள்ளது. நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் இந்த போராட்டத்திற்கு தற்போது தேசிய அளவிலான ஆதரவும் பெருகி வருகிறது.

நேற்றைய போராட்ட களத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வருகை தந்த அனைத்து இந்திய ஆசிரியர் சங்கத்தின் தேசிய தலைவர் நரசிம்ம ரெட்டி கலந்துகொண்டு ஒப்பந்த ஆசிரியர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரி ஒப்பந்த ஆசிரியர்களின் நியமான கோரிக்கைகளை அரசு இனியும் அலட்சியப்படுத்தக் கூடாது.

பணி பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை, என வலியுறுத்தினார். மேலும் இந்த ஒப்பந்த ஆசிரியர்களின் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. போராட்டக் களத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணை பொது செயலா ளர் பாவாணன் ஆசிரியர் போராட்டத்தை பாராட்டி வாழ்த்தி பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img