fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் அணுசக்தி அறிவியல்- தொழில்நுட்பம் அணு திட்ட விழிப்புணர்வு கண்காட்சி

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் அணுசக்தி அறிவியல்- தொழில்நுட்பம் அணு திட்ட விழிப்புணர்வு கண்காட்சி

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி யில் அணுசக்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து ஊக்குவிக்கும் விதமாக அணு திட்ட விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை அகாடமி ஆஃப் சயின்ஸ் இணைந்து நடத்தும் மூன்று நாள் அணு விழிப்புணர்வு கண்காட்சி துவங்கியது.

பல்வேறு நாடுகளின் சேவையில் அணுக்கள், அணுசக்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் அணுசக்தித் துறை யின் முயற்சிகளை இளைஞர்களிடையே முன்னிலைப்படுத்துவதை இத்திட்டத்தின் நோக்கமாக கொண்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாரதியார் பல்க லைக்கழகப் பேரா சிரியர் டாக்டர் பொன்பாண் டியன் மற்றும் மிநிசிகிஸி ன் தலைவர் ஜலஜா மதன் மோகன், கல்லூரியின் செயலர் யசோதா தேவி, மீனா ஆகியோர் இந்த கண்காட்சியினைத் தொடங்கி வைத்தனர்.

அணுசக்தி எதிர்வினைகள், உலை தொழில்நுட்பங்கள் மற்றும் அணுசக்தியின் சாதகமான பயன்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் மாதிரிகள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இந்நிகழ்வானது கண்காட்சியில் அணு சக்தியைச் சுற்றியுள்ள தவறான புரிதல்களை அகற்றுவதற்கு உதவியாக அமைந்திருந்தது.

அணு ஆற்றல் பற்றிய ஆய்வுகளை ஆழமாக ஆராய இளம் மாணவ மாணவிகளின் மனதை ஊக்குவிக்கும் வகையில் பல போட்டிகள் நடத்தப்படுகிறது.தொடர்ந்து நடைபெறும் மூன்று நாட்கள் கண்காட்சியைப் பார்வையிட தமிழகம் முழுவதிலிருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img