கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை மற்றும் பொருளாதாரத் துறை, வெராண்டா ரேஸ் லேர்னிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிஎன்பிஎஸ்சி மற்றும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்குத் தரமான பயிற்சியை வழங்குவதையும், மாநில மற்றும் தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றிகரமாகப் போட்டியிட அவர்களைத் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண் டுள்ளது.
இந்தக் கல்வி யாண்டிற்கு 90 மணி நேர கால அளவு கொண்ட இந்தப் பயிற்சித் திட் டம் மிகவும் குறைந்த கல்விக் கட்டணத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இது அனைத்து ஆர்வமுள்ள மாணவிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவிகள் டிஎன்பிஎஸ்சி – சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்ளவும், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட இலவச மாதிரித் தேர்வுகளிலிருந்தும் பயனடைவார்கள்.



