ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் ஒரு கோடி ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஐடியா ஆய்வகம் திட்டத் தின் கீழ் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் கல்லூரி தலா ரூ.50 லட்சம் பங்களிப்புடன் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் 25வது ஆண்டு விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அப்போது இந்த பூங்கா திறக்கப்பட உள்ளது. இந்த பூங்காவில் மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபணர்கள் தகவல் தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் சிஎஸ்இ செயற்கை நுண்ணறிவு தகவல் துறை செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவியல் துறை சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் அதற்கான புதிய படைப்புகளை உருவாக்கவும் இது பெரிதும் பயன்படும்.
இதற்கான கருவிகள் மற்றும் வசதிகள் தற்போது ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிவடைந்ததும் இந்த ஆய்வகத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதன் மூலம் புதிய ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஏற்படுத்த முடியும், என்று இசிஇ துறை தலைவர் நிஷா ஏஞ்சலின் தெரிவித்தார்.



