fbpx
Homeபிற செய்திகள்பிஎஸ்ஜி செவிலியக் கல்லூரி 32வது விளக்கு ஏற்றும் விழா

பிஎஸ்ஜி செவிலியக் கல்லூரி 32வது விளக்கு ஏற்றும் விழா

கோவை பிஎஸ்ஜி செவிலியக் கல்லூரியின் 32வது விளக்கு ஏற்றும் விழா பிஎஸ்ஜி ஐஎம்எஸ்&ஆர் அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக் டர் ஆர்.ஜெயதீபா வரவேற்று பேசி, விழாவைத் தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், செவிலியத் தொழில் சமூகத்தில் ஏற்றுள்ள புனிதப் பொறுப்பையும், திறமைமிக்க மற்றும் கருணைமிக்க பராமரிப்பாளர்களை உருவாக்கும் கல் லூரியின் உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார்.


விழாவின் சிறப்பு அம்சமாக, முக்கிய பிரமுகர்கள் இணைந்து குத்துவிளக்கை ஏற்றினர். இதனைத்தொடர்ந்து, பிஎஸ்ஜி மருத்துவமனையின் செவிலிய மேற் பார்வையாளர் டாக்டர் அனுராதா தலைமையில் சர்வதேச செவிலியர் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.


Haute École de Santé Vaud நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர் Marielle Schmied சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உலகளாவிய செவிலியத் துறையின் முன்னேற்றம் குறித்து கருத்துகளைப் பகிர்ந்தார். அவரின் உரை மாணவிகளுக்கு ஆழ்ந்த சிந்தனையையும், உயர்ந்த கனவுகளை நோக்கி முன்னேற ஊக்கத்தையும் அளித்தது.


விழாவின் முதன்மை அழைப்பாளராக பத்மஸ்ரீ விருது பெற்ற Ms. Shanti Teresa Lakra, (துணை செவிலியர் மகப்பேறு பணியாளர், இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் பழங்குடியினர் சுகாதாரப் பிரிவு, அந்தமான் மற்றும் நிக்கோபார்தீவுகள்) உரையாற்றினார்.

தொலைதூர மற்றும் சவாலான பகுதிக ளில் சேவை செய்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பின் தங்கிய சமூகங்களில் செவிலியர்கள் ஏற்படுத்தும் மாற்றத்தின் சக்தியை அவர் வலியுறுத்தினார்.

மேலும் மாணவர்கள் தங்கள் கற்றலை மனப்பூர்வமாக தொடர்ந்து கற்று கொண்டே இருக்க வேண்டுமென்றும் மற்றும் நோயாளிகளையும் ஆசிரியர்கைளையும் மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவரது உரை மாணவிகளின் மனதில் சேவை செய்யும் மனப்பான்மையை ஊக்குவிப்பதாக அமைந்தது.


இறுதியில் பிஎஸ்ஜி செவிலிய கல்லூரி துணைமுதல்வர் பேராசிரியர் எஸ்.மீரா. நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img