fbpx
Homeபிற செய்திகள்விஇடி கலை அறிவியல் கல்லூரியில் ஒடிசி பாரம்பரிய நடன நிகழ்ச்சி

விஇடி கலை அறிவியல் கல்லூரியில் ஒடிசி பாரம்பரிய நடன நிகழ்ச்சி

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்கலை மன்றம் சார்பில் ஒடிசி பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கல்கத்தா சதாப்தி நிருத்தி யாயன் கலைப் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

கல்கத்தாவைச் சார்ந்த சதாப்தி மல்லிக் தலைமை வகித்தார்.

கல்லூரி செயலர் எஸ்.டி.சந்திரசேகர், நிர்வாகிகள் எஸ்.பாலசுப்பிரமணியன், மு.யுவராஜா, முதல்வர் வெ.ப. நல்லசாமி, புலமுதன்மையர் சி.லோகேஸ்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் பொ.மா.பழனிசாமி கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img