fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் கல்லூரியில் மகாலிங்கம் குறித்த சொற்பொழிவு

அவினாசிலிங்கம் கல்லூரியில் மகாலிங்கம் குறித்த சொற்பொழிவு

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனமும் குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரி நிர்வாகமும் இணைந்து நடத்தும் அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் முத்துவிழா அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்வு அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன உயர் தொழில்நுட்பக் கூடத்தில் நடத்தியது.

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறு வனத்தின் துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் தலைமையுரை ஆற்றினார். அவர்தம் உரையில் இறையாண்மை என்பது படிப்பிற்கும் வாழ்விற்கும் அப்பாற்பட்டது என்றும், வாழ்வாதாரத்திற்காக மற்றவர்களைத் துன்புறுத்தி செய் யும் செயல்பாடுகள் வாழ்வில் நிம்மதி அளிக்காது என்றும், ஒவ் வொருவரும் அவரவர்கள் கட மையிலிருந்து தவறாமல் தங்கள் பணிகளை கடவுள் சிந்தனையோடு செவ்வனே செய்தும் இயற்கையைப் பேணியும் வாழ வேண்டும் என்ற வள்ளலாரின் கருத்துக்களைக் கூறி தலைமையுரையாற்றினார்.

பெங்களூரூ, முதுநிலை தொழில் நுட்ப ஆலோசகர், அருட்பா அறிஞர் லோக. ஆனந்த பாரதி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ‘பல்லுயிர் ஓம்பும் அறம்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவர் தமது உரையில், உலக மக்களுக்காக வாழ்ந்த சான்றோர்களான இராம லிங்கம், மகாலிங்கம், அவினா சிலிங்கம் ஆகியோரது பெருமை களை எடுத்துக் கூறுவதோடு வள் ளலாரின் 6000 பாடல்களுக்கு உரை வகுக்கச் செய்து வெளியிட்ட பெருமை அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கத்தையேசாரும் என் றும் கூறினார்.

குமரகுரு தொழில்நுட்ப கல்லூ ரியைச் சார்ந்த பேராசிரியர்களும் சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் விருந் தினர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆகியோரும் பல் கலைக்கழகத்தைச் சார்ந்த 200 மாணவியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலை மற்றும் சமூக அறிவியல் புல முதன்மையர் முனைவர் சசி பிரபா ஜெயின் வரவேற்புரை ஆற் றினார். தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் ச.பிரிய தர்சினி அறிமுக உரையை ஆற் றினார். தமிழ்த்துறை, உதவிப் பேரா சிரியர் முனைவர் ம.கீதா நன்றி யுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img