கோவை சரவணம்பட் டியில் உள்ள புரசோன் மாலின் 6-ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் கோலா கலமாக நடந்தது.
கூடுதல் சிறப்பாக, புரோசோன் மாலில் பைக் ஸ்டண்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஜூலை 22-ம் தேதி ‘பல்சர் தினம்’ கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கோவையைச் சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட பல்சர் ரசிகர்கள் பங் கேற்ற ‘பல்சர் மேனியா 2.0’ எனும் இருசக்கர வாகன ‘ஸ்டண்ட் ஷோ’ நடைபெற்றது.
முதல் முறையாக பொதுமக்களின் பங்கேற்புடன் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைக ளுடன் நிகழ்ச்சி ஏற்பாட் டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உயர்-ஆக்டேன் ஒரு நாள் நிகழ்வில் பவர் மேனியா, ஸ்டைல் மேனியா, துல்லிய மேனியா, தொழில்முறை பைக் ஸ்டண்ட்-நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டண்ட் ஸ்கூல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இருந்தன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பார்வையா ளர் களிடமிருந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. பஜாஜ் பல்சர் அணியின் செய்தித் தொடர் பாளர் குறிப்பிடும்போது, “பல்சர் பைக்குகளுக்கான வரவேற்பு அபரிமிதமானது. கடந்த 1 வருடத்தில் 1 மில்லியன் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இளம் தலைமுறையினர் சாகசங்களை விரும்புகி றார்கள்.
இதை மனதில் வைத்து எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த உற்சாகமாக இருக்கிறோம்.
நிகழ்ச்சிக்கு பொது மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஜூலை 22 -ம் தேதி பல்சர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த இடத்தில் 100 வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பல்சர் பைக்குகளை டெலிவரி செய்து, பைக்கின் உரிமையைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.