மத்திய கல்வி அமைச் சகத்தின் கல்லூரிகளுக்கான மதிப்புமிக்க என்ஐஆர்எப் இந்திய தரவரிசை 2023 பட்டியலில் சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனமான சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகள் சிறப்பான இடத்தை பிடித்துள்ளன. இதற்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை பொறுத்தவரை முதல் இடத்தையும், சட்டக் கல் லூரி 11வது இடத்தையும், பல்கலைக்கழக அளவில் 13-வது இடத்தையும், மருத்துவ கல்லூரியைப் பொறுத்தவரை 18-வது இடத்தையும் இக் கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளன.
அர்ப்பணிப்பு உணர் வுடன் கடினமாக உழைத்து இந்த சாதனையை படைத்த இப்பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் தலை மையிலான முழு நிர்வாகக் குழுவிற்கும், துணைவேந்தர், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட் டுகளையும் தமிழக கவர் னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சிமாட்ஸ் பல்கலைக் ழகத்தின் இந்த சாதனையானது,
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு, கல்வித் துறையில் இன்னும் உயர்ந்த இலக்கை அடையவும், சாதனைக்கான புதிய அளவுகோல்களை அமைக் கவும் ஒரு உத்வேகமாக இருக்கும்.
நமது தேசத்தின் எண்ணமான, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ /’ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரதம்’ என்னும் ஒன்றுபட்ட மற்றும் செழுமையான இந்தியாவின் வளர்ச்சிக்கு சிமாட்ஸ் பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கவர்னர் ரவி கூறி யுள்ளார்.