கடலூர் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்காக, மாவட்ட ஆட்சியரின் முன்னெடுப்பு திட்டமான கற்றல் கொண்டாட்டம் நிகழ்வில், சதுரங்க விளையாட்டு, கிராமிய பாடல்கள், பரதநாட்டியம், ஆங்கிலம் பேசும் பயிற்சி மற்றும் ஓவியப் பயிற்சி ஆகியவை மாவட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குமராட்சி ஒன்றியத்தில் வடக்கு வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி சிதம்பரம் ஓவிய பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து கற்றல் செயல்பாடுகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், குமராட்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, லட்சுமி, கோமதி, ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி கல்வித் திட்ட மேற்பார்வையாளர் இளவர சன், ஆசிரியர் பயிற்றுநர் பாஸ்கர், கருத்தாளர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஓவிய வகுப்பு பயிற்சியாளர், சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.



