fbpx
Homeபிற செய்திகள்பொதுமக்களின் தேவை அறிந்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறதுஅமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேச்சு

பொதுமக்களின் தேவை அறிந்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறதுஅமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேச்சு

கடலூர் மாநகராட்சியில் ரூ.39 கோடி மதிப்பில் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளிமாணவிகளுக்கு தங்கும் விடுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி மற்றும் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணி களுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில், கடலூர் அய்யப்பன் எம்எல்ஏ. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.

அப்போது அமைச்சர் எம்ஆர் கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்.
மாவட் டத்தின் வளர்ச்சிக்கேற்ப பொதுமக்கனின் தேவையை அறிந்து வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், பல்நோக்கு சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளியில் பயிலும் 150 மாண விகளும் தற்காலிக இடத்தில் தங்க வைக்கப்பட்டு பயின்று வந்தனர்.

தற்போது ரூ.8.58 கோடியில் செவிலியர் விடுதி, கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அதன் தொன்மை மாறாமல் ரூ.16.20 கோடி மதிப்மதிப்பில் நவீன வசதிகளுவிகளுக்கு தங்கும் விடுதி, பில்புனரமைப்பு பணி கள் தொடங்கி வைக்கப்பட்டுள் ளது. மேலும் கடலூர் மஞ் சக்குப்பம் மைதானத்தை ரூ.14.15 கோடி மதிப்பில் 77 கடைகள், மைதானத்தை சுற்றி நடை பாதைகள் உள்ளிட்ட உட்கட்ட மைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அனைத்து பணிகளையும் குறிப் பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பல்வேறு வகைகளில் ரூ.39 கோடி மதிப்பில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் அனு, மாமன்ற உறுப்பினர்கள், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணி கள்) மணிமேகலை, செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் கண்ணன், செயற்பொறியாளர், மரபு கட்டடங்கள் தேவேந்திரன், செயற் பொறியாளர் சிவசங்கரநாயகி, உதவி செயற்பொறியாளர்கள் பிரவின் குமார், மோகன்ராஜ், அருள், உதவி பொறியாளர் காவிய நாதன், மாநகர திமுக செயலாளர் ராஜா, மண்டல குழு பிரசன்னா சங்கீதா, மாமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், சுதா அரங்கநாதன், சுமதி ரங்கநாதன், ஒன்றிய செயலாளர் கள் சுப்பிரமணியன், விஜய சுந் தரம், தனஞ்செயன், மகேஷ், பிஎஸ் என்எல் குழு உறுப்பினர் கோவிந் தன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள்,அரசு ஒப்பந்ததாரர்கள் ராஜசேகர். சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img