fbpx
Homeபிற செய்திகள்நன்னீர்த் திட்டம்: நாகன் தாங்கல் ஏரி புனரமைப்புப் பணிகள்

நன்னீர்த் திட்டம்: நாகன் தாங்கல் ஏரி புனரமைப்புப் பணிகள்

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பிச்சாண்டிகுளம் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம், நாகன் தாங்கல் ஏரியை புனரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும், பொத்தூர் கிராமம் உப்பரபாளையம் பகுதியில் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கும் இத்திட்டம் உதவுகிறது.

ஏரியை ஆழப்படுத்துதல், உள்நாட்டு மரக் கன்றுகளை நடுதல், முறையான புல் வளர்ப்பு, பறவைகளுக்கு ஏற்ற இடங்களை உருவாக்குதல் மற்றும் பல்லுயிர் பெருக் கத்தை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு சீரமைப்புப் பணிகளில் இந்த நன்னீர்த் திட்டம் (Project Nanneer) கவனம் செலுத்துகிறது.

இந்தத் திட்டத்தால் சுமார் 12 ஆயிரம் பேர் பயனடைகின்றனர். அவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

‘நீலப் பசுமை மையம்’

15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த நாகன் தாங்கல் ஏரியில் 4 ஏக்கரில் 1.5 மீட்டர் ஆழத்திற்கு தூர் வாரப்பட்டுள்ளது. டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ‘நீலப் பசுமை மையம்’[‘The Blue Green Center’] என்ற பெயரில், அறிவாற்றல் மற்றும் கற்றல் அமைப்பைத் தொடங் கியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் அவர்கள் அந்தப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில், டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் பூமிக் கான செயல் திட்டம் (Action for the Planet project) என்ற திட்டத்துடன் இத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img