கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 162 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் நிறுவனரான ராபர்ட் ஸ்டேன்ஸ் கோவை நகரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித் துள்ளார்.
இப்பள்ளியின் 162 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் தாளாளர் ஃபௌலர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் முதல்வர் செலின் வினோதினி விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை பாராளு மன்ற தொகுதி உறுப்பினரும் ஸ்டேன்ஸ் பள்ளியின் முன் னாள் மாணவருமான கணபதி ராஜ்குமார், கௌரவ அழைப்பா ளராக மூத்த வழக்கறிஞரும், ரோட்டரி 3201 மாவட்ட ஆளு நருமான சுந்தர வடிவேலு ஆகி யோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கணபதி ராஜ்குமா ருக்கு பள்ளியின் உயரிய விருது (Excelsa Sequar Award) வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதை மேடையில் தனது தாயுடன் பகிர்ந்து கொண்ட அவர் பேசு கையில், இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் என்பதில் தாம் பெருமிதம் கொள்கிறேன். நான் இந்த நிலைக்கு வர காரணம் இந்தப் பள்ளிதான்` என்று கூறியதோடு பள்ளியில் பயின்ற போது தம்முடைய அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் கணபதி ராஜ்குமார் பேசுகையில், இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள், அவர்களின் மதிப்புகள், பொறுப்புகள், தலைமைத்துவ குணங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை அறிந்து கொள்ளும் வகையில் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் இங்கு இருக்கின்றனர் என்றும் நான் இப்போது உலகின் மிக முக்கியமான இந்திய பாராளுமன்றத்தில் உரையாற் றுவதற்கும் இந்தியாவின் முன்னணி தலைவர்களிடம் பேசுவதற்கும் இந்த பள்ளியில் பயின்ற அனுபவம் தமக்கு கை கொடுக்கிறது என்றும் தெரி வித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறந்த மதிப்பெண்கள் மற்றும் விளையாட்டு, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட போட்டிகளில் சிறந்த ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப் பட்டது.
நிகழ்ச்சியில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.