fbpx
Homeபிற செய்திகள்பொள்ளாச்சி ஸ்ரீ ராமு கல்லூரியில் மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்களுக்கு விருது

பொள்ளாச்சி ஸ்ரீ ராமு கல்லூரியில் மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்களுக்கு விருது

பொள்ளாச்சி ஸ்ரீ ராமு கலை அறிவியல் கல்லூரியில் நேற்று உலக மகளிர் தின விழா கொண் டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர். பிரேமலதா வர வேற்புரை வழங்கினார்.

விழாவில் கல்லூரியின் தாளாளர் லயன் டாக்டர். நித்யானந்தம் தலைமையில் எழுத்தாளர் கனலி (எ) தேஜஸ் சுப்பு, ஆசிரியர் லயன் சித்ரா நந்தகுமார், வுமன் வெல்ஃ பேர் அமைப்பைச் சேர்ந்த கோமதீஸ்வரி ஆகியோ ருக்கு சேவா ஸ்ரீ விருது, கல்லூரியின் முன்னாள் மாணவி, ரெவின்யூ ஆய் வாளர் ஷோபா ரஹ்மத்க்கு யுவஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்வில் நேபாள் நாட்டைச் சேர்ந்த ரஜினி ஸ்ரேஷ்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ரெயின்போ எஃப். எம். அன்புத் தோழி ஜெயஸ்ரீ சிறப்புரையாற்றினார். கல்லூரி பேராசிரியை கீதாஞ்சலி நன்றி கூறினார். விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img