fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் ரத்ததான முகாம்

மேட்டுப்பாளையத்தில் ரத்ததான முகாம்

மேட்டுப்பாளையம் அன்பு ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் அன்பு ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். அய்யூப் தலைமையில் ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை மருத்துவர் ராம்தீ பிகா, வழக்கறிஞர் கா.ப.ரஹ்மான், சுபா மருத்துவமனை மருத்துவர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ரத்த தான முகாமில் பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து
கொண்டு 68 யூனிட் ரத்தங்களை தானமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் முனீர் நகர மன்ற உறுப்பினர் சுனில் குமார் சிட்டி டைம் சென்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் அன்பு ஆம்பு லன்ஸ் சேவை நிறுவனர் ரஜாக் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img