ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது S1 போர்ட்ஃ போலியோவில் ரூ.25,000 வரை விலை குறைப்பு செய்துள்ளது, இச்சலுகை மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் என அறிவித்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் வலுவான செலவு கட்டமைப்பு, வலுவான மேம்பட்ட ஒருங் கிணைந்த உள் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி திறன்கள் மற்றும் உற்பத்திக்கான ஊக்கத் தொகைகளுக்கான தகுதி பெறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை குறைப்பு செய்துள்ளது.
மார்ச் மாதத்திற்கான விலைகள்:
வேரியண்ட் தற்போதைய விலை
S1 புரோ ரூ. 1,29,999,
S1 ஏர் ரூ. 104,999,
S1 X (4kWh) ரூ. 109,999,
S1 X+ (3kWh) ரூ. 84,999,
S1 X (3kWh) ரூ. 89,999,
S1 X (2kWh) ரூ. 79,999.
EVகளின் விலைகளில் இனி மாற்றங்கள் இருக்கலாம் என்பதால், ஓலா S1 ஐ வாங்க இதுவே சரியான நேரம். ஸ்கூட்டர் மார்கெட்டிலேயே மற்ற எல்லா வாகனங்களையும்விட இதுதான் சிறந்த சாய்ஸ். ஆண்டுக்கு ரூ.30,000 வரை மிச்சப்படுத்துகிறது.
கூடுதல் செலவு இல்லாமல் இதன் அனைத்து புராடக்ட்டுகளுக்கும் டூவீலர் தொழில் துறையிலேயே முதல் முறையாக 8 ஆண்டு, 80,000 கிமீ நீட்டிக்கப்பட்ட பேட்டரி வாரன்ட்டியையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூடுதலாக, ஓலா எலக்ட்ரிக் ஏப்ரல் 2024ம் ஆண்டுக்குள் 600 மையங்களாக விரிவுபடுத்தப்போவதாக அறிவித்துள்ளது.இது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.