கரூர் வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா கோவக்குளம் கே.எஸ்.ஆர்.வி மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் தர்ஷன் என்ற மாணவன் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசும் மற்றும் மாநில அளவில்
நடைபெறவிருக்கும் விளையாட்டு போட்டிக்கு தகுதியும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தாளாளர் நடராஜன்பரிசும், பதக்கமும் வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சந்திரன், ஆசிரியர்கள், பள்ளி மாணவனை வாழ்த்தினர்.



