கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த அத்திக்கானூர் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்தநாள் விழா, 75 கிலோ கேக் வெட்டி ரவி சசிகுமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. அங்குள்ள கூட்ரோட்டில் கேக் மற்றும் இனிப்புடன் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் கவியரசு, பாஜக மண்டல தலைவர்கள் சுப்பிரமணி, ராஜேஸ்வரி மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் சசிகுமார், ரவிச்சந்திரன், சரவணன், வெங்கடேசன், சபரி, துரைராஜ், ரமேஷ், பிரசாந்த், செந்தில், பாண்டியன், நெசவாளர் பிரிவு சஞ்சீவ்ராஜ் சிவன், பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து மத்தூரில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பின்னர் மத்தூர் பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



