Homeபிற செய்திகள்சிருஷ்டி 2026 கண்காட்சி கோவையில் தொடக்கம்

சிருஷ்டி 2026 கண்காட்சி கோவையில் தொடக்கம்

தமிழ்நாடு கைவினைக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் சிருஷ்டி 2026 கண்காட்சி மற்றும் விற்பனை, கோவையில் இன்று தொடங்கியது. சுகுணா கல்யாண மண்டபத்தில் செப்டம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

தீபாவளியை முன்னிட்டு நடத்தப்படும் இக்கண்காட்சியில், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், புடவைகள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், நகைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு 66-க்கும் மேற்பட்ட விற்பனைக் கடைகளும், பல்வேறு உணவு வகைகளை வழங்கும் 11 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 29 ஆண்டுகளாக கோவையில் நடைபெற்று வரும் சிருஷ்டி விற்பனை, கைவினைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் பாரம்பரிய கலைப்பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய நிகழ்வாக உள்ளது.

சிருஷ்டி மூலம் கிடைக்கும் வருவாய், கோவையில் ஆண்டுதோறும் நடைபெறும் கைவினைப் பொருட்கள் சந்தையில் பங்கேற்கும் கைவினைஞர்களுக்கான செலவுகளுக்கு மானியமாக பயன் படுத்தப்படுகிறது.
இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள கைவினை ஞர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் வாய்ப்பு பெறு கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img