Homeபிற செய்திகள்148வது பிறந்த தினவிழா: துரை செந்தமிழ் செல்வன் தலைமையில் கோவையில் பெரியார் சிலைக்கு மாலை

148வது பிறந்த தினவிழா: துரை செந்தமிழ் செல்வன் தலைமையில் கோவையில் பெரியார் சிலைக்கு மாலை

தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாளையொட்டி கோவையில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட துணைச்செயலாளர்கள் கல்பனா செந்தில், கோட்டை அப்பாஸ், மாவட்ட பொருளாளர் எஸ்எம்.முருகன், மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, மு.இரா.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி புஷ்பராஜ், பகுதிக்கழக செயலாளர்கள் வ.ம.சண்முகசுந்தரம், சேதுராமன், எஸ்.எம்.சாமி, மா.நாகராஜ், தேவசீலன், வழக்கறிஞர் சிவகுமார், சிவராமன், டெம்போ சிவா, அலுவலக பொறுப்பாளர் ஆர்எஸ் புரம் சி.பூபாலன், எல்பிஎப் விவேகானந்தன், எஸ் ஸ்ரீதர், எஸ்.பிரின்ஸ், சிங்கை ரமேஷ், அணி அமைப்பாளர்கள் வழக்கறிஞர் அன்புசெழியன், தனபால், அர்ஜூனன், ராஜ்குமார், வட்டக்கழக செயலாளர்கள் இராமநாதன், போஸ், காந்திபுரம் மணி, மாமன்ற உறுப்பினர்கள் வித்யா இராமநாதன், பார்த்திபன், பிரிவின், லாரா பிரேம்தேவ், சாரமேடு இஸ்மாயில் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img