கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே டோல் கேட் சாவடி உள்ளது. இந்த டோல்கேட் அருகே பல்வேறு உணவகங்கள், டீக்கடைகள் அமைந்துள்ளது.
இன்று காலை கோவைக்கு வந்து கொண்டிருந்த ஈச்சர் லாரி ஓட்டுநர் டோல்கேட்டை தாண்டிய பின், அருகில் இருந்த உணவகத்தில் உணவருந்த, கடையருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு இருந்த புதர் பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 8 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு, ஈச்சர் லாரி வாகனத்திற் குள் புகுந்து ஒளிந்து கொண்டது. இதனை கண்ட பொதுமக்கள் அலறி அடித்தபடி அங்கிருந்து ஓடினர்.
தொடர்ந்து ஈச்சர் வாகனத்தின் ஓட்டுநர் இது குறித்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்தார். பாம்பு பிடி வீரர் ஈச்சர் லாரியில், புகுந்து ஒளிந்து கொண்ட சுமார், எட்டடி நீளம் உள்ள சாரைப்பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி பிடித்தார். இதனை அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பொதுமக்களிடம் பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு இன்மை, காரணமாக அதனை அடித்து கொன்று விடுகின்றனர்.
இயற்கையின் சூழலில் ஒவ்வொரு உயிரினமும் படைக்கப்பட்டது ஒன்றன்பின் ஒன்றைச் சார்ந்து உள்ளது.
எனவே பாம்புகளை நாம் கொன்றால் அதன் பின் வேறு பல்வேறு இடையூறுகளை நாம் சந்திக்க நேரிடும்.
எனவே பாம்புகளும் இந்த பூமியில் வாழ்வதற் கான ஒரு உயிரினம் தான் அவற்றை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவிப் பது நமது கடமை அது பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட வேண்டும் என்று தெரிவித்தார். எனவே பாம்புகளை கண்டால் தீயணைப்புத் துறையினருக்கோ, அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கோ தகவல் தெரிவியுங்கள் அவர்கள் வந்து அதனை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடுவிப்பார்கள் அதனை ஒருபோதும் கொன்றுவிட வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.



