fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி மாவட்ட மதிமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

தருமபுரி மாவட்ட மதிமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

தருமபுரி பெரியார் மன்றத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுகவின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ராமதாஸ் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வி ஏ பாலமுரளி சிலைக்கு மாலை அணிவித்தார்.

ரா.குணசேகரன் (மாவட்ட அவைத் தலைவர்), சி.கிருபானந்தன் (பொருளாளர்), ராஜாமணி (மாநில விவசாய அணி துணைச் செயலாளர்), மாவட்ட துணை செயலாளர்கள் சி.பட்டு ராஜா, கே.ஆதி மூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ஊமை ஜெயராமன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஒன்றிய செயலாளர் தருமபுரி வடக்கு க. முனுசாமி, தெற்கு என். காந்தி. நல்லம்பள்ளி தெற்கு டி.எம்.சிவராமன், வடக்கு பீ.சரவணன், காரிமங்கலம் நஞ்சுண்டன், நகர செயலாளர் தருமபுரி பட்டு சுப்பிரமணியன், அரூர் கீரை அப்துல் மஜீத், தருமபுரி முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவபாதம், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு பத்மநாபன், தருமபுரி இளைஞரணி ராஜவேல், பழைய தருமபுரி வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img