Homeபிற செய்திகள்பா.ஜ.க.விலிருந்து 15 பேர் விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்

பா.ஜ.க.விலிருந்து 15 பேர் விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்

குமாரபாளையம் பா.ஜ.க.விலிருந்து 15 நபர்கள் அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் சேர்ந்தனர். வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சியினர் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கை செய்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் பா.ஜ.க. விலிருந்து 15 பேர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பங்கேற்று, அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதில் தெற்கு ஒன்றிய செயலர் செந்தில், தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, நகராட்சி கவுன்சிலர் பழனிசாமி, சேகர், செல்லவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img