கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணகுமார் கல்லூரியில், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் குடியிருப்பாளர்கள் விழிப்புணர்வு சங்கம் (RAAC) இணைந்து குப்பை யில்லா கோவை என்ற ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, நேற்று கண்காட்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் வரவேற்று பேசிய கல்லூரி முதல்வர் முனைவர் பிபி ஹாரத்தி கோவை மாநகரை குப்பை யில்லா மாநகரமாக மாற்றுவதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இன்றியமையாதது எனவும், நாம் இணைந்து செயல்படுவதன் மூலம் நமக்கிடையே ஒரு சமூக உணர்வும் நல்லிணக்கமும் ஏற்படும் என்றும் பேசினார்.
நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக ராக் ஐடிசி சுரேஷ் பந்தாரி கலந்து கொண்டார்.
தொடர்ந்து, பங்கேற்ற மாணவர்களுக்கு எவ்வாறு வீட்டிலேயே காய்கறி கழிவுகளை கொண்டு உரம் தயாரிப்பது என நடைமுறை பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணம்மாள் கல்லூரியின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு சங்கமும் (RAAC)-ம் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் சுமார் 5000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.