பெதஸ்தா சிறப்பு ஆசீர்வாத கூட்டம், காருண்யா நகரிலுள்ள டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சென்டரில் நேற்று (8ம் தேதி) மதியம் 2 மணிக்கு நடைபெற்றது.
இதில் இயேசு அழைக்கிறார் மற்றும் காருண்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் பால் தினகரன் குடும்பமாக பங்கேற்று, நற்செய்தி வழங்கி பிரார்த்தனை செய்தார்.
தேர்வெழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.



