fbpx
Homeபிற செய்திகள்கொடிசியா பில்ட் இன்டெக்கில் எஸ்.எஸ்.ஐ டி.எம்.டி கம்பிகள் ஸ்டாலுக்கு வரவேற்பு

கொடிசியா பில்ட் இன்டெக்கில் எஸ்.எஸ்.ஐ டி.எம்.டி கம்பிகள் ஸ்டாலுக்கு வரவேற்பு

கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி 6ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான கண்காட்சியில் கட்டிடம் மற்றும் கட்டுமான பொருட்கள் முழுவதும் இடம் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் 40 ஆண்டுகால வளமை வாய்ந்த எஸ்.எஸ்.ஐ டி.எம்.டி கம்பிகள் ஹால் ஏ அமைந்துள்ள 33வது ஸ்டாலின் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து சக்தி ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் துணைத் தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், “550டி எஸ்.எஸ்.ஐ டி.எம்.டி பார்ஸ் என்று தரமான கம்பிகளை மக்களுக்கு கடந்த 40 ஆண்டு காலமாக வழங்கி வருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலும் எஸ்.எஸ்.ஐ டி.எம்.டி பார் பரவி இருக்கிறது . சுமார் 500 முதல் 1000 வரையிலான வாடிக்கையாளர்கள் எங்களிடம் உள்ளனர்.

அவர்கள் வாங்குவதற்கான காரணம் நாங்கள் தயாரிக்கும் உயர்தர பொருள் என்பதால் தான்” என்றார்.

பிரீமியம் செக்மெண்ட் இருக்கின்ற ஒரு தலைசிறந்த பிராண்ட் ஆகும் எஸ்.எஸ்.ஐ டி.எம்.டி பார். இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 40,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img