கோவை ராமநாதபுரம் புனித பரிசுத்த தமத் திரித்துவப் பேராலயத்தின் 61வது பங்குத் திருநாள் விழா, ‘கெஹில்லா 2 K26’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டது.
தலசேரி பேராயத்தின் முன்னாள் பேராயர் மார் ஜார்ஜ் நவரலக்காட்டு தலைமையில் சிறப்புத் திருப்பலி நடந்தது. இதில் பங்குத்தந்தை மார்ட்டின் பட்டருமத்தில், திவ்யோதயா இயக்குனர் தாமஸ் சீரன் சி.எம்.ஐ., ஃபேபின் நீலங்காவில், சச்சின் கல்லிங்கல் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் நிகில் சிராயத் வரவேற்றார். சிரியாக் சூரவடி பங்கு அறிக்கையைச் சமர்ப்பித்தார். சிஸ்டர் ஆன்சி கிரேஸ் எப்.சி.சி., பி.ஏ. பால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கலைநிகழ்ச்சிகள், பரிசளிப்பு, விருது பெற்றவர்களைக் கவுரவித்தல் ஆகியவை நடந்தன. ஜான் கண்ணநாயகல், வினு சிட்டிலப்பள்ளி உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்தனர். சாஜி ஜோசப் நன்றி கூறினார். விருந்துடன் விழா நிறைவடைந்தது.



