ஊட்டியில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் 2023ம் ஆண்டு மலர் கண்காட்சிக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோட்டக்கலை துறை இயக்குனர் பிருந்தாதேவி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டார்
மேலும் இந்த ஆலோசனைக் கூட் டத்தில் தோட்டக்கலை துறை காவல்துறை வரு வாய்த்துறை நகராட்சி நிர்வாகம் பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கண்காட்சி
ஊட்டியில் வரும் மே மாதம் 19ம் தேதி மலர்க்கண்காட்சி துவங்கு கிறது. 23ஆம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. 6ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்குகிறது.
6, 7 காய்கறி கண்காட்சியும், வாசனை திரவிய காட்சி 12,13,14 தேதிகளில் நடக்கிறது. 13,14, 15 ரோஜா கண்காட்சியும், 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது. 27, 28 குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சி நடக்கிறது.
ஊட்டியில் மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை இயக்குனர் பிருந்தா தேவி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.



