கரூர் மாவட்ட வளர்ச்சிக்காக இதுவரை 3500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள் ளார்.
கரூரில் ஈரோடு சாலையில் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் புதிய கட்டிட திறப்பு விழா கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் அன்பொளி காளியப்பன் தலை மையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சார மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய சங்க கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சங்கம் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கரூர் ஜவுளி பூங்கா தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், கரூர் வீவிங் நிட்டிங் அசோசியேசன் செயலாளர் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
ஜவுளி துறைக்கு என்று பல் வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் வழங்கி உள்ளார். கரூர் மாவட்டத்தில் ஜவுளி துறைக்கு என்று 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
விரைவில் 200 ஏக்கர் நிலம் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு அதற்கான பணிகளை தமிழக முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார். அதேபோல அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை ஏற்றுமதி செய்வதற்காக முருங்கை பூங்கா அமைப்பதற்கு 16 ஏக்கர் நிலம் கேட்டுள்ளார்கள்.
துவக்க ஏற்பாடுகள்
விரைவில் அந்த நிலமும் தொழில்துறையிடம் ஒப்படைக்கப்படும். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தொழில்துறை சார்ந்து அறிவிக்கப் பட்ட திட்டங்களை முடிக்க தேவையான நிலங்கள், அதற்கான பணிகள் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு மிக விரைவில் பணிகள் துவக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு நிதிச்சுமை ஒரு பக்கம் இருந்த போதும் தேர்தல் காலத்தில் அரசு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 85 சதவீதத்திற்கும் மேலாக தமிழக முதல்வர் நிறை வேற்றி தந்துள்ளார்கள்.
கரூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இட தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டும் இதுவரை 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



