fbpx
Homeபிற செய்திகள்தண்டவாளத்தில் மண் சரிவு நீலகிரி மலை ரயில் இன்று ரத்து

தண்டவாளத்தில் மண் சரிவு நீலகிரி மலை ரயில் இன்று ரத்து

கனமழையால் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயில் பாதை அமைந்துள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது

குறிப்பாக கல்லார் முதல் குன்னூர் வரை அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலை முகடுகள் காட்டாறுகள் கடந்து பாறை குகைகளின் வழி யாக செல்லும் இந்த ரயி லில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற் போது மேட்டுப்பாளையம் பகுதியில் வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இந்த மலை ரயில் பாதை அமைந்துள்ள வனப்பகுதியில் நேற்று இரவு கடும் மழை பெய்தது

இதனால் மலை ரயில் பாதை அமைந்துள்ள ஆடர்லி, ஹில்கிரோ போன்ற பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளம் மண்ணால் மூடப்பட்டு சேதமடைந்தது

இதனால் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட வேண்டிய மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது

மேலும் சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்க ரயில்வே ஊழி யர்கள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பணிகளை துவங்க உள்ள தாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை துவங்கியது முதலே அடிக்கடி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் மூன்றாவது முறையாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவது குறிப் பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img