fbpx
Homeபிற செய்திகள்மிகப்பெரிய கோழிப்பண்ணை கண்காட்சி ஹைதராபாத்தில் இன்று துவக்கம்

மிகப்பெரிய கோழிப்பண்ணை கண்காட்சி ஹைதராபாத்தில் இன்று துவக்கம்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உலகின் மிகப்பெரிய கோழிப்பண்ணை கண்காட்சி இன்று (நவ.22 துவங்கி) வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக இந்திய கோழிப்பண்ணை உபகரண உற்பத்தியாளர்கள் சங்க (ஐபிஇஎம்ஏ) தலைவர் உதய் சிங் பயஸ் நேற்று கூறியதாவது:

நாளை (இன்று) முதல் 24ம் தேதி வரை, உலகின் மிகப்பெரிய கோழிப்பண்ணை கண்காட்சியாக பவுல்ட்ரி இந்தியாவின் 15ம் பதிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

இந்திய கோழிப்பண்ணை உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த கண்காட்சியை 2007ம் ஆண்டு முதல் நடத்துகிறது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் குறிப்பாக கோழிப்பண்ணைக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே நிகழ்வாகும்.

ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சர்வதேச கண்காட்சி மையத்தில் இந்த கண்காட்சி நடைபெறும் என்றார். அப்போது, ஐபிஇஎம்ஏ சங்க மூத்த, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img