நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ‘தேசிய ஊட்டச்சத்து மாதம் – 2023’ (போஷன் மா) குறித்த குறும்படம், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை தாங்கினார்.
மேனாள் தலைமை இயக்குநர், தமிழ்நாடு காவல்துறை, முனைவர் செ.சைலேந்திரபாபு பார்வையிட்டார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச் சத்து மாத விழா (போஷன் மா) நாடு முழுவதும் கொண்டப்பட்டு வருகிறது.
தாய் சேய் நலத்தை மேம்படுத் தும் நோக்கில் கர்ப்பம் தரித்து இரண்டு வயது வரையிலான தங்க ஆயிரம் நாட்களின் முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க ‘ஊட் டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து பொருட்களை வழங்குதல் பெண் களிடையே காணப்படும் ரத்த சோகையை தடுத்தல் எனும் முக்கிய இலக்குகளை அடைவது ஊட்டச்சத்து மாதத்தின் நோக்கமாகும்.
எனவே ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராம அளவில் பேரணிகள் பாரம்பரிய உணவுத்திருவிழாக்கள், கண்காட்சிகள், சமுதாய வளை காப்பு, வளரிளம் பெண்களுக்கான வகுப்புகள்,கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஆலோசனை வகுப்புகள், விழிப்புணர்வு கூட்டங்கள், வீடுகள் பார்வை, ஊராட்சி நகராட் சிகள் மூலம் சுகாதாரத்தை ஊக்கு வித்தல், பழங்குடியினர் நலன் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
உதகையில் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் போஷன் மா குறும்படம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. ஏ.டி.சி., கிராம பேருந்து நிலையம் ஆகிய நகராட்சி பகுதிக ளிலும் இக்குறும்படம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
நிகழ்வில், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ஷபிலா மேரி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.பாலுசாமி உதவி ஆணையர் (கலால்) சதீஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார் சக்கரபாணி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட நூலக அலுவலர் வசந்தா மல்லிகா, உதகை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், உதகை வட்டாட்சியர் சரவணக்குமார் உட் பட பலர் கலந்து கொண்டனர்.