fbpx
Homeபிற செய்திகள்உல்லத்தி, மசினகுடி ஊராட்சிப் பகுதிகளில் ரூ.47.53 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்- செய்தியாளர்கள் பயணத்தில் நீலகிரி மாவட்ட...

உல்லத்தி, மசினகுடி ஊராட்சிப் பகுதிகளில் ரூ.47.53 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்- செய்தியாளர்கள் பயணத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தகவல்

நீலகிரி மாவட்டம், உதகை, கூடலூர் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட உல்லத்தி, மசினகுடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ரூ.47.53 லட்சம் மதிப்பீட்டில், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கடந்த 19-ம் தேதி செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித் ததாவது:
தமிழக அரசின் உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சாலை வசதிகள், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உதகை ஊராட்சி ஒன்றியம், உல்லத்தி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.38 லட்சம் மதிப்பீட்டில், தலைக்குந்தா மெயின் ரோடு முதல் எம்ஜிஆர் நகர் வரை சிமெண்ட் நடைபாதை மற்றும் சாலையோர தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும், ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் எம்ஜிஆர் நகர் சலீமா வீடு முதல் மோகன் வீடு வரை முடிக்கப்பட்ட நடை பாதை பணியினையும், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கெம்பலை மெயின்ரோடு முதல் கெம்பலை கிராமம் வரை நடைபெற்று வரும் பணிகளையும், சிமெண்ட் நடைபாதை பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கல்லட்டி பகுதியில் ரூ.14.44 லட்சம் மதிப்பீட்டில், பால் உற்பத்தியாளர் சங்கம் கட்டட பணியினையும், பிஜிஎப் திட்டத்தின் கீழ் கல்லட்டி பால் உற்பத்தியாளர் சங்கம் அருகில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கல்வெட்டு பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கல்லட்டி மெயின் ரோடு முதல் தகன எரியூட்டும் மைதானம் வரை ரூ.7.71 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட சாலைப் பணியும் பார்வையிடப்பட்டன.

கூடலூர் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட மசினகுடி ஊராட்சியில், ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில், வாழைத் தோட்டம் பகுதியில், சமுதாய சுகாதார வளாக கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டும், பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடையினையும் மற்றும் மசினகுடி சாலைப் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சோக்பிட் பணியும் பார்வை யிடப்பட்டன.

உதகை ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மசினகுடி ஊராட்சி ஆகிய பகுதிகளில் மொத்தம் ரூ.47.53 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக் களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை தரமானதாக செய்து விரைவில் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஜல்ஜீவன் மிஷன்

உதகை ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி கெம்பலை கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 51 குடியிருப்புகளுக்கு ரூ.7.46 லட்சம் மதிப்பீட்டில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை ஆட்சியர் பார்வையிட்டார்.

உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்.சாந்தகுமார், கூடலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கீர்த்தனா, உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், விஜியா, கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், அண்ணாதுரை, உல் லத்தி ஊராட்சித் தலைவர் சந்தோஷ் குமார், உதகை வட்டாட்சியர் ராஜசேகர் உள்ளிட்டோர் ஆய் வின்போது உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img