fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இருந்து சீரடிக்கு நேரடி சிறப்பு ரயில் இயக்கம்

கோவையில் இருந்து சீரடிக்கு நேரடி சிறப்பு ரயில் இயக்கம்

கோவையில் இருந்து சீரடிக்கு நேரடி சிறப்பு ரயில் வருகிற 1-ந் தேதி புறப்படுகிறது.ஐந்து நாட்கள் பயணமாக புறப்படும் இந்த ரயில் வடகோவையில் காலை 8 மணிக்கு புறப்படும் தொடர்ந்து திருப்பூர் ஈரோடு சேலம் மொரப் பூர் கிருஷ்ணராஜபுரம் வழியாக செல்லும்

இது குறித்து சீரடி நாக சாய் டிராவல்ஸ் உரிமையாளர் செந்தில் குமார்ஒருங்கிணைப்பாளர் முரளி மார்க்கெட்டிங் மேலாளர்பால் ஆனந்த் சௌத் ஸ்டார் சாஜி ஜான்ஆகியோர் கூறியதாவது:-

மே 1ஆம் தேதி வடகோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் இரண்டாம் தேதி மதியம் சீரடி சென்றடையும் இரண்டாம் தேதி மூன்றாம் தேதி சீரடியில் சாய்பாபா தரிசனம் மற்றும் அங்கு தங்குதல் நாலாம் தேதி மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு மே ஐந்தாம் தேதி மாலை 6 மணிக்கு கோவை வந்தடையும்

இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணமாக 10,500, மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணமாக 8500, ஏசி அல்லாத படுக்கை வசதிரூபாய் 6000 ஆக நியமிக்கப்பட்டுள்ளது.

உணவு தங்கும் வசதி செய்து கொடுக்கப்படும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img