மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் சார்பில் ஊட்டியில் பழங்கால கார்களின் அணிவகுப்பு நடந்தது. மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் சார்பில் சென்னையில் இருந்து 35 பழங்கால கார்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்த கார்கள் ஊட்டியில் உள்ள சிம்சன் நிறுவனத்தின் மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இத் துடன் ஊட்டியில் உள்ள பத்து பழங்கால கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த கார்களின் அணிவகுப்பு நடந்தது. முன்னாள் காவல்துறை இயக்குனர் விஜயகுமார் இந்த அணிவகுப்பை துவக்கி வைத்தார்.
இந்த கார்கள் ஊட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் சிம்சன் நிறுவனத்தின் மைதானத்திற்கு வந்து சேர்ந்தன. பழமை வாய்ந்த அம்பாசிடர், ஜாக்குவார், செவர்லே, கிளிமத் , எம் ஜி , பியட் மற்றும் ஃபோர்டு உட்பட பல்வேறு கார்கள் இடம் பெற்றிருந்தன. இந்த அணிவகுப்பில் செவர்லே டாட்ஜ் பிளை மவுத் உள்ளிட்ட ஆங்கிலேயர் காலத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்கள் கலந்து கொண்டன.
இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வியப்பு டன் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து, மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் செயலாளர் குகன் கூறுகையில், கிராண்ட் ஹெரிடேஜ் கார் டிரைவ் 2023 மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப், சென்னையில் உள்ள முதன்மையான விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் மற்றும் பைக் கிளப் என்பது கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு இலாப நோக்கற்ற அமைப் பாகும்.
பழங்கால மற்றும் கிளாசிக் வாகனங்களைப் பாதுகாத்தல், மறுசீரமைத்தல் மற்றும் காட்சிப் படுத்துதல் ஆகியவற்றில் எங்கள் கவனம் உள்ளது. அக்டோபர் 5ம் தேதி துவங்கிய இந்த அணிவகுப்பு 9ம் தேதி வரை நடக்கிறது, என்றார்.