உதகை ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரி மத்திய அரசின் தேசிய தரவரிசை பட்டியலில் 4-வது இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகத்தால் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு அதன் தரத்திற்கு ஏற்ப தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
புது டில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் மத்திய கல்வி மற்றும் வெளிவிவகாரத் துறை இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன், 2023-ம் ஆண் டிற்கான உயர் கல்வி நிறுவனங் களுக்கான தரவரிசைப் பட்டியலை அதிகாரபூர்வகமாக அறிவித்தார்.
பார்மசி கல்லூரிகளுக்கான தர வரிசை பட்டியலில், உதகையில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல் லூரி கடந்த ஆண்டு வகித்த 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு வந்ததன் மூலம் சிறந்த 10 கல்லூரிகள் பிரிவிலிருந்து, சிறந்த 5 கல்லூரிகள் என்ற பிரிவிற்கு முன்னேறியுள்ளது.
ஜெ.எஸ்.எஸ்.உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்விக் கழகத்தின் அங்கங்களான மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரி 7-வது இடத்தையும், ஜெ.எஸ்.எஸ். மருத் துவக்கல்லூரி, ஜெ.எஸ்.எஸ்.பல் மருத்துவக் கல்லூரி முறையே 11-வது மற்றும் 37-வது இடத்தையும் பெற்றுள்ளன.
தேசிய தரவரிசை பட்டியல்
2016-ம் ஆண்டிலிருந்து வெளியிடப் பட்டுக் கொண்டிருக்கும் தேசிய தரவரிசை பட்டியலில் ஜெ.எஸ்.எஸ்.உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்விக் கழகம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) தொடர்ந்து முதல் 50 தரவரிசையில் இடம்பிடித்திருக்கிறது. இந்த ஆண்டிண் தரவரிசைப் பட்டியலில் 34-வது இடத்தை தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக தக்க வைத்துள்ளது .
ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசி கேந்திர மஹாஸ்வாமிஜி தலைமையில் ஜெ.எஸ்.எஸ்.மகாவித்யாபீடத்தின் நிர்வாக செயலாளர் டாக்டர் சி.ஜி.பெட்சுர்மத், இணைவேந்தர் டாக்டர் பி சுரேஷ், துணைவேந்தர் டாக்டர் சுரிந்தர் சிங், பதிவாளர் டாக்டர் பி மஞ்சுநாதா ஆகியோரின் இடைவிடாத உழைப்பும், தொலை நோக்கு பார்வையும் ஜெ.எஸ்.எஸ்.கல்வி நிறுவனங்கள் இந்த இடங்களைப் பெற உதவியது என்றால் அது மிகையாகாது.
ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரி, உதகை இந்தத் தரத்தை அடைவதில் கல்லூரியின் தற்போதைய மாணவர் கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது.
கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சமூக பணிகளில் ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரி, உதகையின் புதுமையான பார்வையும், அயராத உழைப்பும் இந்த தரத்தை பெற உதவியது என்று கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



