fbpx
Homeபிற செய்திகள்மஹிந்திராவின் புதிய சுப்ரோ அறிமுகம்

மஹிந்திராவின் புதிய சுப்ரோ அறிமுகம்

இந்தியாவில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா லிமிடெட், சிறிய வர்த்தக வாகனப் பிரிவு, அதன் முதல் இரட்டை எரிபொருள் வாகனமான சுப்ரோ சிஎன்ஜி டூயோ அறிமுகப்படுத்துகிறது. சுப்ரோ சிஎன்ஜி டூயோ வகையில் சிறந்த ஏற்று திறன் மற்றும் வகையில் முன்னணி மைலேஜை வழங்குகிறது.

ரூ.6.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலை உடன், சுப்ரோ சிஎன்ஜி டூயோ வசீகரமான அம்சங் களின் கலவையை வழங்குகிறது. இது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயங்கக்கூடியது,

மஹிந்திரா அண்டு மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் டிவிசன் தலைவர் வீஜய் நக்ரா பேசுகையில், சுப்ரோ சிஎன்ஜி டூயோ அதன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்த இயக்கச் செலவுகளை வழங்குவதற்காக, இரட்டை எரிபொருள் பிரிவில் இந்த நிறுவனத்தின் நுழைவைக் குறிக்கிறது என்றார்.

எம் அண்டு எம், ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி மற்றும் ப்ராடக்ட் டெவலப்மென்ட் தலைவர் ஆர்.வேலுசாமி கூறுகையில், சுப்ரோ சிஎன்ஜி டூயோ கணிசமான சேமிப்புக்கு வழிவகுக்கும் குறைவான உமிழ்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குறைந்த இயக்க செலவுகளையும் வழங்குகிற, ஒரு ஸ்மார்ட் மற்றும் சுலபமாக இயக்கக்கூடிய இரட்டை எரிபொருள் சிறிய வர்த்தக வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய சுப்ரோ சிஎன்ஜி டூயோவில், நேரடி-இயக்க சிஎன்ஜி, அதிகபட்ச பாதுகாப்பிற்கான நுண்ணறிவு சிஎன்ஜி கசிவு கண்டறிதல் மற்றும் 750 கிலோ எடையுள்ள சிறந்த ஏற்றும் திறன் ஆகியவை அடங்கிய பல தொழில்துறை முதல் அம்சங்களை ஒருங்கிணைத்துள்ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img