fbpx
Homeபிற செய்திகள்நீலகிரியில் தேர்தல் செலவின பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம்

நீலகிரியில் தேர்தல் செலவின பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் – 2024 ஐ முன்னிட்டு, தேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தல் – 2024 ஐ முன்னிட்டு, தேர்தல் செலவின பார்வையாளர்கள் டி.கிரண் (உதக மண்டலம், கூடலூர் மற்றும் குன்னூர்) மற்றும் சந்தீப் குமார் மிஸ்ரா, (அவினாசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர்) ஆகியோர் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, பாராளுமன்ற பொதுத்« தர்தல் 2024-ஐ சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படையினர், நிலையான கண் காணிப்பு குழுவினர் என பல்வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, கண் காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளதை உணர்ந்தும், தங்களது பொறுப்புக்களை உணர்ந்தும் நேர்மையாக பணியாற்ற வேண்டும். ஏனெனில் எதாவது தவறுகள் ஏற்பட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும். அதேபோல தேர்தல் பணி யாற்றுகிறவர்கள் யாருக்கும் பயப்படக்கூடாது.

தங்களுக்கு ஏதேனும் குறைகள், கோரிக்கைகள் இருந்தால் தயங்காமல் எங்களிடம் தெரிவிக்கலாம். அனைவரும் சிறப்பாக பணிபுரிய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து சந்தீப் குமார் மிஸ்ரா கூறியதாவது: பார் வையாளர் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்தவுடன் அனைவருக்கும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள் என்பதை மனதில் நிறுத்தி பணிபுரியவேண்டும்.

குறிப்பாக, பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உட்பட கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைவரும் சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையினை முறையாக மேற்கொள்ள வேண்டும். தேர்தல் செலவின கணக்குகளை உரிய முறையில் கண்காணித்து, சம்மந்தப்பட்ட வேட்பாளர் கணக்கில் பதிவேற்ற வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணி யாற்ற நியமிக்கப்பட்டவர்கள் தேர்தல் விதிமுறைகள் குறித்து நன்கு அறிந்து, விழிப்புணர்வோடு உள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி நன் றாக பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, தேர்தல் செலவின பார்வையாளர்கள், தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தில் (MCMC) மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., , மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img