fbpx
Homeபிற செய்திகள்பள்ளி மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள்- நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆய்வு

பள்ளி மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள்- நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி மாணவ, மாணவிகள் பயணிக்கும் வாகனங்களை, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் நேற்று (மே 30) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பள்ளி வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து, ஆய்வு செய்யப் பட்டது.
மாவட்டத்தில் சுமார் 273 பள்ளி வாகனங்கள் மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், உதகை வட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் சுமார் 150 வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இப்பள்ளி வாகனங்களில் தீயணைப்புகருவி, முதலுதவி பெட்டி, அவசரகால வழி மற்றும் வாகனத்தின் நிலை, ஆகியவை நல்ல நிலையில் பயன்பாட்டில் உள்ளனவா என்றும், வாகனத்தின் தகுதி சான்று, புத்தகங்கள் போன்றவற்றை சரியான முறையில் பாராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப் பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ள காரணத்தினால் வாகனத்தினை எவ்வாறு இயக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதனை குறித்தும், பாதுகாப்பு முறைகள் குறித்து ஓட்டு நர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட பள்ளி வாகனங்களில் போக்குவரத்துத்துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை, சீர்செய்த பின் மீண்டும் அந்த வாகனங்கள் ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர்.

முன்னதாக, ஆட்சியர் தீயணைப்புத்துறையின் மூலம் அளிக்கப்பட்ட தீ தடுப்பு தொடர் பான செயல்முறை காட்சிப் படுத்தியதை பார்வையிட்டும், அரசு மருத்துவ கல்லூரி மருத்வமனையின் சார்பில், பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு, இலவச கண் பரிசோதனை முகாம் நடத் தப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

ஆய்வின் போது உதகை வருவாய் கோட்டாட்சியர் துரை சாமி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், உதகை வட்டாட்சியர் ராஜசேகர், தீய ணைப்புத்துறை அலுவலர் அன்பகன், மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை-1) விஜயா, தீயணைப்புத்துறை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img