கோவைக்கு வந்த மேற்கு ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் களை கேரளா பாரம்பரிய இசையுடன் வரவேற்றனர்.
மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்றத்தின் சபாநா யகர் மைக்கேல் ராபர்ட்ஸ்,
சட்டமன்ற உறுப்பினர்கள் டேவிட் ஹனி,டேவிட் மற்றும் இந்திய வம்சாவளி ஆஸ்திரேலியா சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்தனர்.
கோவை விமான நிலையத்தில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் தங்களின் மகிழ்ச்சியை நடனமாடி வெளிப்படுத்தினர்.
செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் கூறியதாவது:
கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், கல் வித்தரம் அறியவும் தமி ழகம் வந்துள்ளோம்.
கோவை மற்றும் கோத்தகிரியில் தனி யார் கல்லூரிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நம் நாட்டில் உள்ளன. நம் நாட்டின் கல்வித்தரம் உயர வேண்டும். கல்வித்தரத்தில் வேறுபாடும் மாறுபாடும் இருக்கக்கூடாது.
தமிழகத்திற்கும் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான உறவை மேம்படுத்த வேண்டும். நல்ல வேலை செய்பவர்களுக்கு எப்போதும் எங்கேயும் வேலை உண்டு.
கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள் தமிழகத்தில் மகிழ்வை அளிக்கின்றன.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்து எடுக்கும் முயற்சிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் பி.டி.ஆர் உள் ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்திருக்கிறோம் என்றார்.