மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்க ளுக்காக உழைக்கின்ற தலைவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கள் எனவே நீங்கள் செய்கின்ற பணி சாதா ரண பணி அல்ல இறை வன் உங்களிடத்தில் கொடுத்திருக்கின்ற முக் கியமான பணி மானிட முன்னேற்றத்திற்றாக உழையுங்கள் என இந்திய திருத்தூதர் பேராயர் ஜிரெல்லி உதகையில் உரையாற்றினார்.
கத்தோலிக்க கிறிஸ்த்த வர்கள் தலைவராக உள்ள திருத்தந்தையின் இந்தியத் திருத்தூதராக பேராயர் லியோபோல்டொ ஜிரெல்லி பணியாற்றி வரு கிறார். இவர் கடந்த 2021 ஆண்டு மார்ச் மாதம் 13 ம் தேதியிலிருந்து புது டெல்லியில் வத்திக்கான் நாட்டின் தூதுவராகவும், கத்தோலிக்க கிறிஸ்தவர் களின் தலைவராக உள்ள திருத்தந்தை போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின் இந்திய பிரதிநிதியாகவும் பணியாற்றி கொண்டிருக் கின்றார்.
பேராயர் லியோ போல்டொ ஜிரெல்லி இதற்கு முன் இஸ்ரேல், சைப்ரஸ் போன்ற நாடுகளில் திருதூதராக பணியாற்றியவர். இவர் இரண்டு நாள் பயணமாக உதகைக்கு வருகை புரிந்தார்.
நீலகிரிக்கு இவர் வருவது இதுவே முதல் முறையாகும். அகில உலக கத்தோலிக்கத் திரு அவையின் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் ஆசிகளை அவர் சார்பாக உதகை மறை மாவட்ட அனைத் துக் கத்தோலிக்க கிறிஸ் தவர்களுக்கும் திருப்பலி மூலம் வழங்கினார்.
முன்னதாக உதகை யில் உள்ள திரு இருதய ஆண்டவர் பேராலயத் திற்க்கு வருகை புரிந்த லியோபோல்டொ ஜிரெல்லிக்கு பேராலய வளாகத்தில் கும்ப ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் உதகையில் உள்ள அனைத்து மத பிரதிநிதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் மத்தியில் அவர் பேசிய தாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக உழைக்கின்ற தலைவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் கள். எனவே நீங்கள் செய்கின்ற பணி சாதா ரண பணி அல்ல.
இறைவன் உங்களிடத்தில் கொடுத்திருக்கின்ற முக்கியமான பணி. நீங்கள் மானிட முன்னேற் றத்திற்றாக உழையுங்கள். அது கடினமானதாக இருந்தாலும் உங்களுக்காக இறைவனிடம் பிரார் தனை செய்கிறேன். இவ்வாறு பேராயர் ஜிரெல்லி உதகை யில் உரையாற்றினார்.
பின்னர் இருதய ஆண்டவர் பேராலயத் தில் பேராயர் லியோ போல்டொ ஜிரெல்லி தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ், மைசூர் ஆயர் வில்லியம் பேராலய பங்கு தந்தை ஸ்டனிஸ் உதவி பங்கு தந்தை அபிஷேக் மற்றும் 70க்கும் மேற்பட்ட குருக்கள் இனைந்து திருப்பலி நிறைவேற்றினர். இந்த திருப்பலியில் பெருந்திரளான கிறிஸ்தவர் கள் கலந்துகொண்டனர்.



