டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்ரீநல்லா கவுண் டர் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் மேம் பாட்டுக்கான விருது வழங்கும் விழா கல்லூரியின் என்.ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது.
கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ.டி.புவனேஷ்வரன் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் பயன்பாட்டு அறிவியல் புல முதன்மையர் முனைவர் மீரா ராமன் வரவேற்றார்.
டாக்டர் என்.ஜி.பி.கல்வி குழுமங்களின் இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். முதல்வர் (பொறுப்பு) முனைவர் எஸ்.சரவணன் விருதுக்கு தேர்வு பெற்றவர்கள் பட்டியலை அறிவித்தார்.
கல்விசார் செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி சார் செயல்பாடுகளில் சிறப் பாகச் செயல்பட்ட மாணவர்களும் பேரா சிரியர்களும் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களில் பத்து ஆண்டுகள், பதினைந்து ஆண்டுகள், இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு அவர்கள் கௌர விக்கப்பட்டனர். கணினி புல முதன்மையர் முனைவர்’ மேரி மேக்டலின் ஜேன் நன்றி கூறினார்.



