fbpx
Homeபிற செய்திகள்மழைநீர் வடிகால், தார் சாலைப் பணி- கோவை மேயர், ஆணையாளர் ஆய்வு

மழைநீர் வடிகால், தார் சாலைப் பணி- கோவை மேயர், ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 99 மற்றும் 85-க்கு உட்பட்ட கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணை யாளர் மு.பிரதாப் ஆகியோர் பார்வையிட்டனர்.

மழைநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை 15 தினங்களுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

தெற்கு மண்டலம் வார்டு எண் 79-க்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் மேயர் ஆய்வு செய்தார். அப்ப குதியில் உள்ள மழைநீர் வடிகாலை தூர் வாரவும், புதிதாக மழை நீர் வடிகால் கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும் சம்பந்தப்பட்ட பொறி யாளருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், தெற்கு மண்டலத் தலைவர் ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் கள் அஸ்லாம்பாஷா, சரளா, ராஜலட்சுமி, வசந்தாமணி, பாபு, உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கே.கருப் பசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் ஆறுமுகம், மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி பொறி யாளர்கள் ஏஞ்சலினா, சபரிராஜ், சரண்யா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறி யாளர் பசும்பொன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமு உள்ளிட்டோர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img