நீலகிரி மாவட்டத்தில் கடந்த 19 ஆண்டுகளாக தமிழ்பணியுடன் சமூக பணிகளாற்றி வரும் மக்களுக்காக அறக்கட்டளையின் நிறுவனரும் தலைமை செயலக அனைத்து பத்திரிக் கையாளர் சங்க மாநல துணை செய லாளரும், நீலகிரி மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தினுடைய மாநில துணைத் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான தமிழ் வெங்கடேசனின், தமிழ் பணி மற்றும் சமூக சேவையை பாராட்டி சென்னையில் “அறம் செய விரும்பு” அறக்கட்டளை சார்பில் சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கி கவுரவித்துள்ளது.
விருதினை திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ், நகைசுவை நடிகர் மதன் பாபு ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர் .தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட சமூக ஆர்வலர்கள் பலர் விருதுகளை பெற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு தமிழ் பணியுடன் சிறப்பான சமுக பணியை பாராட்டி, குறிப்பாக பேரிடர் காலங்களிலும் கொரோனா ஊரடங்கு காலத்திலும், தமிழ் வெங்கடேசன் வழங்கிய நிவாரண உதவிகளை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது
தமிழ் வெங்கடேசனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த் துகளையும் தெரிவித்து வருகின்றனர்.