fbpx
Homeபிற செய்திகள்உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவையில் சைக்கிள் பயணம் அமேஸ் அறக்கட்டளை ஏற்பாட்டில் நடந்தது

உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவையில் சைக்கிள் பயணம் அமேஸ் அறக்கட்டளை ஏற்பாட்டில் நடந்தது

உலகம் முழுவதும் ஏப்ரல் 2ம் தேதி, உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆட்டிஸம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தினம், அவர்களின் குரலுக்கும் உணர்வுக் கும் அங்கீகாரம் அளிக்கும் வகை யில் அவரவர் திறமைக்கு ஏற்ற பணிகளைச் செய்ய ஊக்கப்படுத் துவதை நோக்கமாகக் கொண்டு கொண்டாடப்பட்டுள்ளது.

கோவை கே.வடமதுரையில் செயல்பட்டு வரும் அமேஸ் அறக் கட்டளை என்கிற என்ஜிஓ அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்நிறுவனத்தில் ஆட்டிஸம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை யான திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அமேஸ் அறக்கட்டளை சார்பில் உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இன்று (6ம் தேதி) காலை ஆட்டிஸம் விழிப்புணர்வு பயணம் என்கிற சைக்கிள் பயணம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சைக்கிள் களில் புறப்பட்டு காலை 7.50 மணி அளவில் கே.வடமதுரையில் உள்ள அமேஸ் அறக்கட்டளையின் லைப் ஸ்கில் சென்டருக்கு வந்தடைந்தனர்.

யங் இண்டியன்ஸ், கோயமுத்தூர் சைக்கிளிங் கிளப், சுகூ சைக்கிளிங் கிளப் ஆகியவற்றின் உறுப்பினர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
அமேஸ் இளைஞர்கள் இடிகரையில் இருந்து தங்கள் சைக் கிள் பயணத்தைத் தொடங்கி வந்தடைந்தனர்.

இந்த சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தொப்பி, காலை உணவு வழங்கப்பட்டது. சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வையொட்டி இல வச மருத்துவ பரிசோதனை முகாமிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் பொது மருத்துவ பரிசோதனைகளையும் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் பரிசோதனைகளையும் மேற் கொண்டனர். அதேபோல பல் மருத்துவர்கள் அஸ்வின், அபர்னா ஆகியோர் பங்கேற்று பல் மருத் துவ பரிசோதனைகள் செய்து ஆலோ சனை வழங்கினர்.
இம்மருத்துவ முகாமில் ஏராளமா னோர் பங்கேற்று பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img