திருநெல்வேலி மக்களவை பொதுத்தேர்தல் 2024-நடைபெறுவதையொட்டி, திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் சோனாலி பொன்ஷே வயங்கங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவை பொதுத் தேர்தல் 16.03.2024 அன்று அறிவிக்கப்பட்டு, மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 04.06.2024 அன்று நடைபெறவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் cVIGIL செயலி மூலம் வரபெற்ற புகார்கள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் பொது பார்வையாளர் திருமதி.சோனாலி பொன்ஷே வயங்கங்கர், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், டவுன் மந்திரமூர்த்தி மேல்நிலைப் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடியில் பதற்றமான வாக்குசாவடியினையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கங்கைக்கொண்டான் சோதனை சாவடி பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவின் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வதை தேர்தல் பொது பார்வையாளர் சோனாலி பொன்ஷே வயங்கங்கர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
நடைபெற்ற ஆய்வில், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, திருநெல்வேலி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.