Homeபிற செய்திகள்உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்

உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் தேசிய மாணவர் படை, நெக்டார், விளையாட்டுத்துறை, சாலைப்பாதுகாப்புச் சுற்றுக் காவல் ஆகியவற்றுடன் கோவை மாநகர காவல் தமிழ் நாடு போக்குவரத்துக் காப்பாளர் அமைப்பும் இணைந்து நகரின் முக்கியச் சாலைச் சந்திப்புகளான சுங்கம், ராமநாதபுரம், சிங்கா நல்லூர், ஹோப் காலேஜ் ஆகிய இடங்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடியது.

அதன் ஓர் அங்கமாக விதைப்பந்து அடங்கியப் பொட்டலங்கள் பாதசா ரிகள், வாகன ஓட்டிகள், ஓட்டுநர்கள், பயணிகளுக்கு வழங்கப்பட்டன. நம் பூமியைக் காப்பது அனை வரது கடமை எனும் கருத் தைப் பதிவுசெய்தனர்.

சுங்கம் சாலைச் சந்திப்பில் நடந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி முனைவர் மேரி பபியோலா கலந்து கொண்டார். சாலைப்பாதுகாப்புச் சுற்றுக் காவல் அதிகாரி முனைவர் ப.மகேஸ் வரி, வேதியியல் துறையின் தலை வர் முனைவர் குணவதி, சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவலின் ஒருங்கிணைப்பாளர் சிந்தியா, தேசிய மாணவர் படையின் அலுவலர் முனைவர் சக்தி விஷ்ணு பிரியா, வேதியியல் துறையின் பேராசிரியர் ஷெரின், தாவரவியல் துறையின் பேராசிரியர் ஷின்ஸி ஆகி யோரும் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் சாலை சந்திப்பில் சாலைப்பாது காப்புச் சுற்றுக் காவலின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா மற்றும் மேரி ஜெர்லின் ஆகியோரும் பங்குபெற்றனர். சிங்காநல்லூர் சந்திப்பில் நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் திவ்யா மற்றும் பியானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஹோப் காலேஜ் சந்திப்பில் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவலின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரதுஷா பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை மாணவியர், நாட்டுநலப் பணித் திட்ட மாணவியர், சாலைப்பாதுகாப்புச் சுற்றுக் காவல் அங்கத்தினர், விளையாட்டுத்துறை மாணவியர், நெக்டார் மாணவியர் ஆகியோர் மொத்தம் 80 மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்த னர்.

ஹோப் காலேஜ் சந் திப்பில் நான்கு இடங் களிலும் வருகை தந்து எமக்குப் பாதுகாப்பு நல்கி மகிழ்ச்சியுடன் இவ்விழா நடைபெற உதவினர். மேலும் உலக சுற்றுச் சூழல் தினத்தைக் கல்லூரி யின் முதல்வர் அறையின் முன்பு தேசிய மாணவர் படையும், வேலை வாய்ப்பு அமைப்பும் பூமியைக் காப்பது நம் கடமை எனும் நோக்கில் கொண்டாடி மகிழ்ந்தது. முதல்வர் முனைவர் அருட்சகோதரி மேரி பபியோலா முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.

இந்திய விமானப்படை விமானி பர்குணன் கலந்து கொண்டு பூமியைக் காப்பதில் நம்மவர் கடமை, தேவை, கட்டாயம் முதலியவற்றைத் தம் சிறப்புரையில் ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
வேதியியல் துறையின் தலைவர் முனைவர் குணவதி அனைவரையும் வரவேற்றார். கோ

வை மாநகர போலுஸ் டிராபிக் வார்டன் ரங்கபிரபு கலந்து கொண்டார்.
அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img