கனடா நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய பல்கலைக்கழகமான யார்க் பல்கலைக்கழகம், உலகெங்கிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளோடு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவும் மற்றும் சமவாய்ப்பு வழங்கும் தொழில்நுட் பங்களை சந்தைக்கு மிக விரைவாக கொண்டுவர தொழிலகங்களை ஏதுவாக்கவும், உலகத்தரத்திலான பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஆராய்ச்சியில் உயர்தர செயல் திட்டங்களையும் மற்றும் தலைமைத் துவத்தையும் யார்க் பல்கலை வழங்குகிறது.
318 மில்லியன் கனடா டாலர் மதிப்புள்ள ‘கனெக்டட் மைண்ட்ஸ் இனிஷியேட்டிவ்’ என்பதும் இக்கல்வி நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி செயல்திட்டமாகும். “இந்தியாவுடனான எமது உறவு களை வலுப்படுத்துகிற பல முக்கிய செயல்திட்டங்கள் மீது முதலீடு செய்வதிலும் மற்றும் திறமையான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பரஸ்பர ஆதாயமளிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் யார்க் பல்கலை பெருமை கொள்கிறது.
இந்தியாவையும், அதன் வளர்ச்சி வரலாற்றையும் மற்றும் உலகின் மீது இந்தியாவின் தாக்கத்தையும் புரிந்துகொள்வதற்கு ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்படும் இந்தியா இமெர் ஷன் செயல்திட்டம் என்பதும் இந்த முன்னெடுப்புகளில் ஒன்றாகும்’’ என்கிறார் யார்க் பல்கலையின் துணைவேந்தர் டாக்டர் ரோண்டா. எல். லென்டான்.
கல்வி சார்ந்த ஒத்துழைப்பிற்காகவும் மற்றும் இரு நாடுகளுக்கிடையே மாணவர்களது பரி மாற்ற நிகழ்வை ஆதரிக்கவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஓபி. ஜிண்டால் குளோபல் பல் கலைக்கழகமும் மற்றும் கனடாவின் யார்க் பல்கலைக்கழகமும் கையெழுத் திட்டிருக்கின்றன.
யார்க் பல்கலையின் எட்டாவது பிரசிடென்ட் மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் ரோண்டா. எல். லென்டான் மற்றும் ஓபி. ஜிண்டால் குளோபல் பல்கலையை நிறுவிய துணை வேந்தரான பேராசிரியர் சி. ராஜ் குமார் ஆகியோர், ஒருங் கிணைந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பல்வேறு முன்னெடுப்பு திட்டங்களை அறிவித் திருக்கின்றனர்.