ஐடிசி நிமைல், பிரசாரப் படமான ‘நிமைல் மகிழ்ச்சி பொங்கும் தரை’ அறிமுகப்படுத்தியது. ஓகில்வியால் கருத்துருவாக்கப்பட்டு அஃப்ஷான் ஹுசைன் ஷேக் இயக்கிய இந்த அன்பான படம், குழந்தைகள் தரைகளில் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதற்கு போதுமான நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஒரு சக்திவாய்ந்த கதையின் இந்த பகுதியில், கதாநாயகன், சிறு குழந்தை. அவர் பள்ளி நாடகத்திற்காக தவளை போல குதித்து பயிற்சி செய்கிறார். அவரது உணர்ச்சிமிக்க பயிற்சி நிமைலில் உள்ள வேப்பம்பூவின் சக்தியுடன் தரைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதை நினைவூட்டுகிறது.
குட் மார்னிங் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம், மொழிகள் மற்றும் எல்லைகளை தாண்டிய உடனடி உணர்வுப்பூர்வமான தொடர்பை உருவாக்குகிறது. ஐடிசி லிமிடெட் பர்சனல் கேர் ப்ராடக்ட்ஸ் பிசினஸ் பிரிவின் தலைமை நிர்வாகி சமீர் சத்பதி கூறுகையில், தரை தளங்கள் பெரும்பாலும் பலருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானமாக உள்ளது.
தரை தளங்களை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. நிமைல், வேப்பம்பூவின் சக்தியால் அனைவருக்கும் தூய்மையான மற்றும் சுகாதாரமான தரை தளங்களை உருவாக்குகிறது என்றார்.
ஓகில்வி இந்தியா சிசிஓக்கள் கைனாஸ் கர்மாகர் மற்றும் ஹர்ஷத் ராஜாத்யக்ஷா கூறுகையில், திரைப்பட இயக்குனர் அஃப்ஷான், தூய்மையான, பாதுகாப்பான தரை ஆரோக்கியமான குழந்தை பருவத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு இடையேயான இந்த தொடர்பை வெளிப்படுத்திய விதத்தில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
நிமைல், வேம்பு அடிப்படையிலான, 100% இயற்கையான ஆற்றல்* ஃப்ளோர் கிளீனர் சில்லறை விற்பனை மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களில் 975 மில்லி 175 ரூபாய்க்கு தென்இந்தியா முழுவதும் கிடைக்கிறது.