fbpx
Homeபிற செய்திகள்சைமா 2023-24 புதிய நிர்வாகிகள் -தலைவராக டாக்டர் சுந்தரராமன் தேர்வு

சைமா 2023-24 புதிய நிர்வாகிகள் -தலைவராக டாக்டர் சுந்தரராமன் தேர்வு

கோவையில் சைமாவின் 64 ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2023 -24ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதில் தலைவராக சிவா டெக்ஸ்யான் லிமிடெட் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன், துணைத் தலைவராக ஈரோடு பல்லவா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் துரை பழனிச்சாமி, உதவி தலைவராக திருப்பூர் சுலக்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் எஸ் கிருஷ்ணகுமார் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

அவர்கள் இன்று (22ந்தேதி) நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:- ஜவுளி தொழிலில்உள்ள சிக்கல்களை தீர்க்கவும் உலகளாவிய போட்டி தன்மையை திறன்பட கையாண்டு மேம்படுத்தவும் முயற் சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்திய ஜவுளி மற்றும் ஆடை தொழில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக 110 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. முப்பதாயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் மற்றும் 44 மில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய செலாவணியை ஈட்டும் தொழிலாக விளங்குகிறது.

இளம் தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப் களை மேம்படுத்துவதற்காக மேலாண் மை மேம்பாட்டு திட்டத்தை சைமா வழங்க உள்ளது. இது தொடர் பான திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் ஜவுளி ஆலைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையே சார்ந்து இருப்பதால் தற்போதைய நிலையை தக்க வைத்துக் கொள்ளவும் சமநிலைப்பாட்டை உறுதிப்படுத்த வும் மாண்புமிகு முதலமைச்சருக்கு வேண்டுகோள் கொடுத்துள்ளோம்.

அனைத்து மூலப் பொருட்கள் மீதும்குறிப்பாக பாலியஸ்டர் பஞ்சு மற்றும் விஸ்கோஸ் பஞ்சு போன்ற செயற்கை பஞ்சுகளின் மீதான குவிப்பு வரிகளை நீக் குவதில் மாண்புமிகு பாரத பிரதமர் எடுத்த தொழிற்சார்பான முயற்சிகளை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

இருப்பினும் புதிய தர கட்டுப் பாடு ஆணைகள் காரணமாக செயற்கை இழைகள் மற்றும் இழை நூல்களின் சீரான விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது இது தொழில் துறையினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img